உலகத் தமிழிசை மாநாடு – 2019

தரமணி, சென்னை

முன்னெடுக்கும்

உலகத் தமிழிசை மாநாடு – 2019

அறிவிப்பு

   பாடலுக்கேற்ற இசையையும் இசைக்கேற்ற நடனங்களையும் நிகழ்த்துவது  பண்டைய காலம் முதலே தமிழ்ச் சமூகத்தில் நிலவி வருகின்றது. இருப்பினும் தமிழ் மொழி எப்படி பல்வேறு காலக்கட்டங்களில் அந்நிய மொழிகளின் தாக்கத்திற்கு உள்ளானதோ அதேபோல தமிழிசையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது; அந்நிலை இன்றும் நீடித்துவருகின்றது. எனவே, தமிழிசையினை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உலகளாவிய தமிழிசை  அறிஞர்களையும் கலைஞர்கலையும் தமிழிசை அமைப்புகளையும் ஒன்றிணைத்து முதல் உலகத் தமிழிசை மாநாட்டை 2019 நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழிசைத் தொடர்பான இம்மாநாடு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு  முதல் முறையாக நடைபெற உள்ளதால், இம்மாநாட்டிற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிறத்திற்கும் மேற்பட்ட  தமிழிசை அறிஞர்களும் தமிழிசைக் கலைஞர்களும் வருகைத்தர உள்ளனர்

மாநாட்டுப் பொருண்மைகள்

 தமிழிசை, தமிழிசையின் தொன்மை, மக்களிசை,  தமிழிசை நாடகம், இசை மருத்துவம், திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு, இலக்கியத்தில் இசை,  தமிழிசை ஆளுமைகள், இசைத் தூண்கள், தமிழிசை ஓவியங்கள், தமிழிசைச் சிற்பங்கள், இசைக்கருவி வகைகள், இசைக் கருவிகள் செய்முறைகள், தமிழிசைக் கலைஞர்களின் வாழ்வியல் , தமிழகப் பழங்குடிகளின் இசை, தமிழிசையும் பிற இசைகளும், தமிழகத்தில் தமிழிசைக் கல்வி, தமிழிசைப் பாடநூல்கள், தமிழ்நாடு அரசின் தமிழிசைச் சார்ந்த  திட்டங்கள், தமிழிசைக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் வரலாறும் பணிகளும், பல்கலைக்கழகங்களில் தமிழிசைத் துறைகளின் வரலாறும் ஆய்வுப் பணிகளும், தன்னார்வத் தமிழிசைப் பள்ளிகள், தமிழிசை நிகழ்ச்சிகள் கருத்தரங்கங்கள் அன்றும் இன்றும், அயல்நாடுகளில் தமிழிசை பரவல் : ஆசிய நாடுகளில் தமிழிசை, ஆப்பிரக்கா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா அமெரிக்கா, கனடா போன்ற  நாடுகளில் தமிழிசை ஆகியன குறித்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரைகள் ஒருங்குக்குறி யூனிக்கோடு எழுத்துருவில் அமைய வேண்டும். கட்டுரையாளரைத் தொடர்புக் கொள்வதற்கு ஏற்ற வகையில் கட்டுரையின் முகப்பில் கட்டுரையாளரின் முழு முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் ஆகியவை இடம்பெற வேண்டும்.

விருதுகள்: தமிழிசை அறிஞர்களுக்கும், தமிழிசைக் கலைஞர்களுக்கும்,  சிறந்த ஆய்வுக் கட்டுரையாளர்களுக்கும் மாநாட்டுக்குழு சார்பில் தமிழிசை ஞானி, இளம் தமிழிசை ஞானி, தமிழிசைச் செம்மல்,  ஆப்ரகாம் பண்டிதர் விருது, மற்றும் அயல்நாட்டுத் தமிழ் அமைப்புகளின் விருதுகள் வழங்கப்படும்.

தமிழிசை அரங்கேற்றம் : மாநாட்டில் அனைத்து வகையான தமிழிசைக் கருவிகளையும் கலைஞர்களையும் கொண்டு தமிழிசை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்படும்

இசைக் கருவிகள் காட்சியரங்கம்:  மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழிசைக் கருவிகள் மற்றும் தமிழகப் பழங்குடிகளின் இசைக் கருவிகள் காட்சிப்படுத்தப்படும்.

குறிப்பு :  உலகத் தமிழிசை மாநாடு நடைபெறும் இடம் மற்றும் நாள்  பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்பு முகவரி :  

முனைவர் கு. சிதம்பரம்

மாநாட்டு ஒருங்கிணைப்புச் செயலர்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

சி.பி.டி. வளாகம், தரமணி , சென்னை – 600 113

கைபேசி : 0091-9500106269     

Print Friendly, PDF & Email

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *